பிரணாப் முகர்ஜியை ஆதரித்த பீகார் மாநிலத்துக்கு ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி - திட்டக் குழு ஒப்புதல்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததற்கு பலனாக பீகார் மாநிலத்துக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலமானது மத்திய அரசிடம் இருந்து ஆண்டு தோறும் ரூ4 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் பெற்று வந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைக் கூட கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போதுதான் பீகார் மாநில அரசால் பெற முடிந்தது. ரூ10 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு பீகார் பெற்றிருந்தது.
இருப்பினும் தமது மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற நிதிஷ்குமார் திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் 2012-13 ஆம் ஆண்டுக்கு ரூ20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகமாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
தமிழக அரசும் தொடர்ந்தும் சிறப்பு நிதி ஒதுக்கக் கோரிய நிலையிலும் கூட ரூ 3 ஆயிரம் கோடிதான் மத்திய திட்டக் குழு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications