தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நள்ளிரவில் கொடுந்தாக்குதலை நடத்தியிருக்கிறது.
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அண்மையில் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்துவதை நாள்தோறும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தது. இந்நிலையில் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை மீண்டும் விரட்டித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் தொடர்ந்தும் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ராஜபக்சே கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி இலங்கை கடற்படை எச்சரித்திருக்கிறது. இதனால் மீனவர்கள் உயிரைக் கையில்பிடித்தபடி கரைசேர்ந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications