ஹைதராபாத்தில் ஆதரவு திரட்டிய பிரணாப்புக்கு சோதனை மேல் சோதனை...
ஹைதராபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி ஆதரவு திரட்ட ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்துக்கு சென்ற இடத்தில் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டிருக்கிறது.
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹாலில் பிரணாப் முகர்ஜியின் ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்றது. இந்த ஹாலுக்கு வரும் முன்பே விமான நிலையத்தில் தெலுங்கானா ஆதரவு குழுவினர் பிரணாப் முகர்ஜியை காரை வழிமறிக்க முயற்சித்தனர். தெலுங்கானா விவகாரத்தில் பிரணாப் முகர்ஜியின் நிலை என்ன என்பதை பகிரங்கப்படுத்தக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்தத் தடையைத் தாண்டி ஜூப்ளி ஹாலில் கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டு பிரணாப் முகர்ஜி வெளியேறிய 10-வது நிமிடத்தில் மீண்டும் பரபரப்பு. ஜூப்ளி ஹாலின் ஒரு பகுதியில் மின்கசிவால் தீ பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமக்கு ஆதரவு கோரி தமிழ்நாட்டுக்கு வந்த பிரணாப் முகர்ஜிக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்திலோ அடுத்தடுத்து சோதனைகளையே பிரணாப் சந்திக்க நேர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications