ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழ்அழகன் . இவரது மகன் பெண்ணாடம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவன் தனது நண்பர்களுடன் இறையூர் வெள்ளாற்றங்கரை அருகிலுள்ள வயல் அருகே உள்ள மரவள்ளிக் கிழங்கை பறித்து தின்றுள்ளான். இதைக் கண்ட நிலத்தின் உரிமையாளரான மகாராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.
இதனை அறிந்த தமிழ்அழகன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இறையூரில் உள்ள மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து, அவரைத் அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்று விட்டனர். இதனை கண்டித்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறையூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல எம்.எல்.ஏ. மகனை தாக்கிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகிகள் பெண்ணாடம் காவல் நிலையம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. மகன் மற்றும் அவரது நண்பர்களை பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்திற்குள் சென்ற தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்துவோம் என்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தாகவும் போலீஸ் பாதுகாப்பில் இருந்த இருவரையும் அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் அவரது மகன், நண்பர் உள்ளிட்ட 30 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல, இன்ஸ்பெக்டர் மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications