கணவனும், மனைவியும் எப்படி இருக்க வேண்டும்: க. அன்பழகன் விளக்கம்
தென்காசி: கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாக அதாவது மானத்தை காப்பாற்றி பெருமை சேர்ப்பவராக இருக்க வேண்டும் என்று தென்காசியில் நடந்த பிரபல தி்முக நிர்வாகியின் திருமண விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பகழன் தெரிவித்தார்.
திருமண விழாவில் க. அன்பகழன் பேசியதாவது,
மனிதர்கள் அனைவரும் சமம். நிறத்தால், பிறப்பால் வேறுபாடு, உயர்வு, தாழ்வு இல்லை என்று நபிகள் நாயகம் போதித்தார். பண்டைய தமிழர் நாகரிகமும் எல்லோரும் ஓர்குலம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. தென்னகத்தில் உள்ள திராவிட கலச்சாரம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க அனைத்து தகுதிகளும் உள்ளதாக நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் பேசியுள்ளார். பெரியார் சொன்ன கருத்துகளை அன்றே சொன்னவர் நபி. தமிழ் சமுயாத்தில் துறவறம் உண்டு. ஆனால் கட்டாயமில்லை.
தகுதியுள்ள ஆணும், பெண்ணும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். துறவறம் கூடாது என்று நபி வலியுறுத்தினார். கணவனும், மனைவியும் ஒருவருக்குஒருவர் ஆடையாக அதாவது மானத்தை காப்பாற்றி பெருமை சேர்ப்பவராக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications