ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாண் மீது இன்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை!
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு விவாகரத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது இன்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைதாகவுள்ளார்.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனைகளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒதுக்கிக் கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் ஆகியோர் மகாராஷ்டிர முதல்வர்களாக இருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய முறைகேடுகள் நடந்தன.
இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடந்துள்ளது. இதில் அசோக் சவாண் மீது 18 மாதங்களுக்கு முன்பே சிபிஐ எப்ஐஆர் தாக்கல் செய்துவிட்டது. இந் நிலையில் இன்று அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
நாளை இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
தேஷ்முக் மீது சவாண் குற்றச்சாட்டு:
இந் நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் சாட்சியம் அளித்த அசோக் சவாண் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மீது குற்றம் சாட்டினார்.
குடியிருப்புக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்த முடிவை அப்போது முதல்வராக இருந்த தேஷ்முக்தான் எடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் படிதான் தான் செயல்பட்டதாக சவாண் தெரிவித்தார்.
இந்த விவாகரத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்கள் சுஷில் குமார் ஷிண்டே, தேஷ்முக் மற்றும் சவாண் ஆகிய மூவரும் விசாரணைக் குழு முன்பு சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் 3 பேரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்று தெரிவித்ததோடு ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
குதியில்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சவாண் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சவாண் உள்பட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications