ரூ.50ல் இருந்து 10க குறைந்த அவரைக்காய் விலை: மக்கள் மகிழ்ச்சி

பாவூர்சத்திர்த்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனையான ஒரு கிலோ அவரைக்காய் நேற்று ரூ.10க விலை குறைந்தது. இது போல் வெண்டை ரூ.16லிருந்து ரூ.98 ஆகவும், மல்லி இலை ரூ.30லிருந்து ரூ.10 ஆகவும் குறைந்தது. கீழப்பாவூர் ஒன்றியம், கீழப்பாவூர், மேலப்பாவூர், தட்டிபத்து, புதுகுளம், திப்பணம்பட்டி, நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவரைக்காய் மகசூல் அதிகரித்துள்ளது. இதையடுத்து பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக உள்ளதால் அவரைக்காய் விலை ஒரேயடியாகக் குறைந்துள்ளது. இதனால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்,
கத்தரிக்காய் கிலோ ரூ.12, தக்காளி ரூ.24, பீன்ஸ் ரூ.36, கோஸ் ரூ.24, வெங்காயம் ரூ.30, பல்லாரி ரூ.14, முருங்கைகாய் ரூ.30, மிளகாய் ரூ.56க்கு விற்கப்படுகிறது. மிளகாய் விலை கடும் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
