நெல்லையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 13 இடங்கள் மாயம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள 13 பணியிடங்கள் உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாததற்கு மேலிட உத்தரவே காரணம் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அப்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் 94 காலி பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. பாட வாரியாக இருந்த இடங்கள் வருமாறு, தமிழ்-33, ஆங்கிலம் 6, வரலாறு 15, கணிதம் 8, உயிரியல் 2, வணிகவியல் 16, பொருளியல் 10, அரசியல் அறிவியல் 2, உடற்கல்வி இயக்குனர் (கிரேடு 1)1, தாவரவியல் 1 ஆகிய இடங்களே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விலங்கியல், வேதியியல், இயற்பியல், இந்திய பண்பாடு, மனையியல், முகவியல், புதுயியல் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்தில் ஒரு காலி இடம் கூட கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 பள்ளிகளில் தலா 9 ஆசிரியர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் புதிய மேல்நிலைப்பள்ளிகளான பிள்ளையார்நத்தம் பள்ளியில் 2 இடங்களும், சுத்தமல்லி பள்ளியில் 4 இடங்களும், முனைஞ்சிபட்டியில் 4 இடங்களும், சாயமலை பள்ளியில் 3 இடங்களும் காலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பள்ளிகளில் உள்ள 13 இடங்கள் குறித்து விதிப்படி அறிவிக்கப்படவில்லை எனவும் இதுபோல் மாவட்டம் முழுவதும் மாணவர்களி்ன் நலனைக் கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், பதவி உயர்வால் காலியாக உள்ள இடங்கள் என சுமார் 40 முதல் 50 இடங்கள் வரை மாயமாகிவிட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications