திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி காமெடி செந்திலின் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

Senthil
மதுரை: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது அதை கண்டித்து திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

யார் நில அபகரிப்பில் ஈடுபட்டாலும், எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அவர்களுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உண்ணாவிரதம் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இந்நிலையில் திமுகவினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் ஏமாற்று வேலை தான் என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டனர்.

இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையின்போதும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோதும் திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+