திருமலையில் இனி பேட்டரிகார்கள் மட்டுமே! - தேவஸ்தானம் புது முடிவு
திருப்பதி : சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இனி திருமலை மீது பேட்டரி வாகனங்களை மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து தருகிறது. ஏழுமலையான் கோவிலில் அமைந்துள்ள திருப்பதி மலையில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க விரைவில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை மட்டுமே திருப்பதி மலையில் அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிர மணியம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
திருமலையில் அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இப்பணி முடிவடைந்த பிறகு திருமலையில் பேட்டரியுடன் இயங்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நெடுஞ்சாலை வழியாக திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். அவர்கள் வரும் வழியில் தங்குவதற்கு வசதியாக நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ. தூரத்திற்கு ஒரு தங்கும் விடுதி அமைக்கப்படும். ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மேலும் பல சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications