மேட்டூர் அணையை இன்று முதல் 10 நாட்களுக்கு திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க மேட்டூர் அணையை இன்று முதல் 10 நாட்களுக்கு திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென்மேற்கு பருவமழை மூலம் சாதாரணமாக கிடைக்கக் கூடிய மழை கூட இந்த ஆண்டு கிடைக்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டியது அவசியமாகிறது.

8ம் தேதி (இன்று) முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் கிழக்குக் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி, மேற்குக் கால்வாயில் 150 கன அடி வீதமும் வழங்கப்படும். இதன் மூலம் சேலத்தில் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி தாலுகாக்கள், நாமக்கல்லில் திருச்செங்கோடு, ஈரோட்டில் பவானி ஆகிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+