இன்னும் 15 நாளில் கூடங்குளம் மின்சாரம் கிடைச்சிடும்: இப்பவும் சொல்கிறார் நாராயணசாமி!

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தெற்காசிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே பயிற்சி அளிப்பது என்ற அடிப்படையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங், தமிழகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து பெங்களூரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சார்க் ஒப்பந்தப்படிதான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் பயிற்சி அளிக்காமல் ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளது. இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள். கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகள் முடிந்துவிட்டன. 15 நாளில் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications