கோயில் நிலங்களை மீட்க அரசு அதிரடி திட்டம்: அமைச்சர் ஆனந்தன் தகவல்
நெல்லை: தமிழகத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்க 3 டி.ஆர்.ஓ.க்கள், 7 தாசில்தார்கள், 14 நில அளவையர்கள் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட அரசு கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நெல்லையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் துறை ரீதியான ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.300 கோடி மதிப்புள்ள 190 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்க 3 டி.ஆர்.ஓ.க்கள், 7 தாசில்தார்கள், 14 நில அளவையர்கள் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் நிலங்கள் குறித்த விவரம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
கோயிலுக்கு குத்தகை, வாடகை பாக்கி கொடுக்காதவர்களின் பெயர்களை அந்தந்த கோயில்கள் முன்பு பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும். தமிழகத்தில் இந்தாண்டு மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 516 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அன்னதான திட்டத்திற்கு ஒவ்வொரு கோயிலிலும் அன்னதானம் வழங்க மண்டபம், அதில் டேபிள், சேர்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்ற தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications