அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல்.. தயாராகுங்கள்: சமாஜ்வாதி கட்சியினருக்கு முலாயம் உத்தரவு

முலாயம்சிங் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. ஏறத்தாழ 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்குத் தயாராக கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்
மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளைக் கைப்பற்றி தமது வலுவை நிரூபிக்க வேண்டும் என்று கட்சியினரை முலாயம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை தொகுதிகளில் பிரச்சாரம் செய்யுமாறும் கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். உத்தரப்பிரதேசத்தின் 58 தொகுதிகளில் 58 பார்வையாளர்களையும் நியமித்து கடந்த தேர்தலில் தோற்றுப் போன தொகுதிகளில் பிரச்சனைகளைக் கண்டறிந்து பணி அவற்றை சரி செய்யவும் முலாயம் வலியுறுத்தியிருக்கிறார்.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். தற்போதைய நிலவரப்படி மக்களவையில் சமாஜ்வாதி கட்சிக்கு 22 இடங்கள் இருக்கின்றன.
2014-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது என்பதை முலாயம்சிங் யாதவின் உத்தரவு வெளிப்படுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications