தடகள வீராங்கனை பிங்கி பிராமானிக் 25 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிப்பு!

இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமினிக். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இந்த நிலையில் இவருடன் 2 ஆண்டுகளாக வசித்து வந்த 30 வயது பெண் ஒருவர், பிங்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அவர் ஒரு ஆண் என்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் 14ம் தேதி பிங்கியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கின் விசாரணையில் பிங்கிக்கு பாலின சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக பிங்கிக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையின் போது, மறைமுகமாக எடுக்க வீடியோ இணையதளத்தில் வெளியானது.
இதனால் பிங்கிக்கு ஆதரவாக பல பொது அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் களத்தில் இறங்கின. இந்த நிலையில் பிங்கியின் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரங்களில் மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த பிங்கியின் தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பிங்கியின் மனுவை ஏற்று கொண்ட பராசத் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது. முன்னதாக பிங்கியின் பாலின சோதனையின் அறிக்கை நேற்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications