சதானந்த மாற்றதுக்கு ஒக்கலிகா சமூகம் கடும் எதிர்ப்பு- நாளை "பெங்களூர்" பந்த் நடத்த அழைப்பு
பெங்களூர்: பெங்களூரில் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒக்கலிகா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்கும் போது "பெங்களூர் பந்த்" நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடக முதல்வராக இருந்த சதானந்த கவுடா, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மாற்றப்பட்டு லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினர் பெரும்பான்மையினராவார். சதானந்த கவுடாவை மாற்றுவதற்கு ஒக்கலிகா சமூகத்திஅன்ர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் வேறுவழியில்லாமல் சதானந்த கவுடாவை மாற்றியுள்ளனர்.
இதனால் பெங்களூரில் நேற்று ஒக்கலிகா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வி.வி.புரத்தில் நஞ்சவதோடா சுவாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மினர்வா சர்க்கிள், ஜே.சி.ரோடு வழியாக டவுன்ஹாலை அடைந்தனர். ஊர்வலத்தில் எதியூரப்பாவுக்கு எதிராகவும், பாஜக மேலிடத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல், மாண்டியா மாவட்டம் சென்னபட்னா மற்றும் பல இடங்களில் ஒக்கலிகா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
மேலும் ஜெகதீஷ் ஷெட்டர் நாளை முதல்வராக பதவியேற்கும்போது பெங்களூர் பந்த் நடத்தவும் ஒக்கலிகா சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications