விபச்சாரம் மூலம் ஒரு ராத்திரிக்கு 1000 பவுண்டு வசூலித்த மாணவி வரி ஏய்ப்பில் கைது!

தனது படிப்புச் செலவுக்காகவே இவர் விபச்சாரத்தில் குதித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு விபச்சாரத்தில் குதித்த இவர் 2007 வரை அதை தொடர்ந்துள்ளார். மொத்தம் 3 லட்சம் பவுண்டு பணத்தை இவர் விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்துள்ளார். ஆனால் ஒரு பைசா கூட வரி கட்டவில்லையாம். இதையடுத்தே இவரைக் கைது செய்தனர்.
விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து மேற்கு லண்டன், கென்சிங்டனில் ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கியுள்ளார். அதன் மொத்த மதிப்பு 3,60,000 பவுண்டுகளாகும். இந்தப் பணத்தில், 1,10,000 பவுண்டுகளை ரொக்கமாகவே கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்தப் பெண்ணின் வீட்டில் போலீஸார் சோதனை போட்டபோது அங்கு 73 ஆயிரம் பவுண்டு பணம் இருந்ததைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் அவருக்குக் கொடுத்த ஏராளமான நகைகளும் கூட சிக்கியுள்ளன.
பல்வேறு இணையதளங்களில் தன்னைப் பற்றி விளம்பரம் செய்தும், எஸ்கார்ட் ஏஜென்சிகள் மூலமும் இவர் கால் கேர்ள் தொழிலை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தில்லாலங்கடி பெண்ணின் பெயர் டோனா அசுடெய்டிஸ். படிக்க வரும்போது இவரிடம் பெரிய அளவில் பணம் ஏதும் இல்லை. படிப்புச் செலவுக்கு கையில் காசு இல்லாததால் விபச்சாரத்தில் குதித்துள்ளார்.
பெரிய பெரிய பணக்காரர்களுக்கு எஸ்கார்ட் பெண்ணாக சென்று அதன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டுதான் அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார்.
இவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் பவுண்டு வரை வரி கட்டாமல் இருந்ததைக் கண்டுபிடித்தனர் போலீஸார்.
இவர் ஒரு இரவுக்கு 1000 பவுண்டு வரை பணம் வாங்குவாராம் வாடிக்கையாளர்களிடம்.
இவரது இரட்டை வாழ்க்கை குறித்து அவரது பெற்றோர்களுக்குக் கூட தெரியவில்லையாம்.
கோர்ட்டில் இவரை ஆஜர்படுத்தியபோது தனது கால் கேர்ள் தொழில் குறித்து விரிவாக அறிக்கை வாசித்தார் டோனா. அப்போது அவர் கூறுகையில், நான் கடந்த 10 வருடங்களாக தனிப்பட்ட முறையில் எஸ்கார்ட் ஆக செயல்பட்டு வருகிறேன். எனக்கு பரிசுப் பொருட்களாக நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொடுப்பார்கள் என்றார்.
இவர் மீது விபச்சார சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குத் தொடரவில்லை. காரணம், சட்டத்திற்குட்பட்டு ஒரு வரையறைக்குள் விபச்சாரம் செய்ய இங்கிலாந்தில் அனுமதி உண்டு. அதற்குள்தான் இவரும் ஈடுபட்டுள்ளார். இவர் செய்த தவறு சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டாததே. அதற்காகத்தான் தற்போது இவரைக் கைது செய்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications