பஸி முகம்மது சவூதி சிறையில் அடைபட்டுள்ளார், மீட்பது கஷ்டம்... மத்திய அரசு
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த பஸி முகம்மது தற்போது சவூதி அரேபிய சிறையில் அடைபட்டுள்ளார் என்றும், அவரை மீட்பது மிகவும் கடினமான காரியம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அபு ஜிண்டாலைத் தொடர்ந்து இந்தியாவில் முக்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய பஸி முகம்மதுவை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவுள்ளதாகவும், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தனது கணவர் அப்பாவி. அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு கிடையாது. இந்திய அதிகாரிகள் மே 13ம் தேதி எனது கணவரை சவூதியில் அவர் தங்கியுள்ள இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி பஸியின் மனைவி நிக்கத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கெளரவ் பானர்ஜி கூறுகையில், சவூதி அரேபிய சிறையில் பஸி முகம்மது அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய அதிகாரிகள் கைது செய்யவலி்லை. சவூதி அரேபிய போலீஸார்தான் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரை மீட்டு கொண்டு வருவதற்கு பல்வேறு கடினமான நடைமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக பதிலைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இன்னும் 2 வாரத்தில், பஸி குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கோர்ட் உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications