துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ்காரர் கூடாது: பிரகாஷ் காரத் போர்க்கொடி
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாதவரைத் தான் வேட்பாளராக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியையே நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் கட்சிகளைத் தொடர்பு கொண்டார்.
அப்படி அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை தொடர்பு கொண்டபோது அவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் காங்கிரஸ் அல்லாதவராக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் அல்லாத ஒருவர் தான் துணை குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நாங்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். இனி காங்கிரஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருக்கு என்று ஒரு அந்தஸ்தும், மதிப்பான பின்னணியும் இருக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அன்சாரியை ஆதரிக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் தெரிவித்தார். வரும் 14ம் தேதி டெல்லியில் நடக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று மமதா தனது கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் முகல் ராயை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் நீண்ட நாட்கள் கழித்து திரிணாமூல் காங்கிரஸ் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications