சுட்டுக் கொன்று விடுவேன்... ஒபாமா மனைவிக்கு மிரட்டல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு ஒரு போலீஸ்காரர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், வாஷிங்டன் காவல்துறையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர், தான் மிஷல் ஒபாமாவை சுட்டுக் கொல்லப் போவதாக ஒரு சக காவலரிடம் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனில் இருந்த ஒரு துப்பாக்கிப் படத்தைக் காட்டி இதைக் கொண்டுதான் தான் சுடப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலரை, பாதுகாப்புப் பிரிவிலிருந்து மாற்றி நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் அந்தக் காவலர் மீது விசாரணை நடத்தவும் ரகசியப் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரகசியப் போலீஸ் பிரிவு செய்தித் தொடர்பாளர் எட்வின் டோனோவன் கூறுகையில், மிஷல் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு காவலரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து மிஷல் ஒபாமாவின் அலுவலகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட காவலர் குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications