வானிலை ஆய்வு மைய அறிக்கை பொய்க்கிறது- குறைந்து போனது கேரள தென்மேற்கு பருவ மழை!
திருவனந்தபுரம்: கேரளாவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 32 விழுக்காடு குறைந்துபோயுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. அதுவும் பல இடங்களில் சாரல் மழையாகத்தான் இருந்தது. வடகேரள பகுதிகளில் மட்ட்ம் கனமழை பெய்தது. ஆனால் எதிர்பார்த்ததுபோல் தொடர்ந்து மழை நீடிக்கவில்லை.
அப்போது சராசரி மழை நிச்சயம் கிடைத்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தென்கேரள பகுதிகளில் தொடர்ந்தும் சாரல் மழைதான் நீடித்து வருகிறது.
கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 99 செ.மீ மழை பெய்யும்.இந்த ஆண்டோ 70 செ.மீ மழைதான் கிடைத்திருக்கிறது. வழக்கமான சராசரியைவிட இது 32 விழுக்காடு குறைவாகும்.
இருப்பினும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பாவது உண்மையாகுமா? என்பதுதான் இப்போதைய எதிர்பார்பு












Click it and Unblock the Notifications