மமதாவை சந்திக்க விடாததால் முதல்வர் அலுவலக ஊழியரை சுத்தியலால் தாக்கிய நபர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அபாயின்ட்மென்ட் இல்லாமல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்திக்க வந்த நபர் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் அலுவலக ஊழியரை சுத்தியலால் தாக்கினார்.

மேற்கு வங்க மாநிலம் கி்ருஷ்ணாகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிமேஷ் மிஷ்ரா. அவர் நேற்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்திக்க தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் முதல்வரை சந்திக்க அபாயின்ட்மென்ட் உள்ளதா என்று அனிமேஷிடம் கேட்டுள்ளனர். அவர் அபாயின்ட்மென்ட் இல்லை ஆனால் முக்கிய விஷயமாக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மமதாவை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிமேஷ் முதல்வர் அலுவலக ஊழியர் ஆலோக் சாஹா என்பவரை சுத்தியலால் தாக்கினார். இதில் படுகாயமைடந்த ஆலோக்கை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அனிமேஷை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் கூறுகையில்,

கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே தலைமைச் செயலக கட்டிடத்திற்கு நான் அவ்வப்போது வந்து செல்கிறேன். கடந்த இடதுசாரிகள் ஆட்சியில் எனது நிலம்அபகரிக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டுத் தருமாறு முதல்வர் மமதாவை சந்தித்து கோரிக்கை விடுக்க வந்தேன். எனக்கு நியாயம் கிடைக்க முதல்வரை சந்திக்க வந்தேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+