தலைமை ஆசிரியையின் பிடிவாதம்... வகுப்பறையில் தற்கொலைககு முயன்ற ஆசிரியை
சிவகங்கை பிஎட் படிப்பில் சேர தலைமை ஆசிரியை அனுமதி தர மறுத்து வந்ததால் மனம் உடைந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி என்ற ஊரில் அரசுப் பள்ளி உள்ளது. இங்கு உடல் கல்வி ஆசிரியையாக இருப்பவர் மணிமாலா. இவர் பிஎட் படிக்க விரும்பினார். அதற்கு தலைமை ஆசிரியையின் அனுமதி தேவை. ஆனால் தலைமை ஆசிரியை தெய்வானை அனுமதி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பல மாதங்களாக அனுமதி தராமல் இழுத்தடித்து வந்ததால் நேற்று தலைமை ஆசிரியையை அணுகி, இன்றுதான் கடைசி நாள், விண்ணப்பிக்க வேண்டும், தயவு செய்து அனுமதி தாருங்கள் என்று கோரியுள்ளார் மணிமாலா. ஆனால் தலைமை ஆசிரியை மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. அதைத் தொடர்ந்து தனது வகுப்பறைக்கு வந்த மணிமாலா அங்கு தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டார். கதவையும் மூடிக் கொண்டார்.
தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் மயங்கி விழுந்த நிலையில் இருப்பதைப் பார்த்த சக ஆசிரிய, ஆசிரியைகள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications