For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் படையினருக்கு பயிற்சி அளிக்கும் நாடுகளில் முதன்மையானது இந்தியாதான்: இலங்கை

By Mathi
Google Oneindia Tamil News

Keheliya Rambukwella
கொழும்பு: இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதன்மையான நாடு என்று இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் தடை விதித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

1000, 1500 பேருக்கு பயிற்சியளிக்கும் இந்தியாவுக்கு 8 பேர் என்ற விவகாரம் பெரிய பிரச்சனை அல்ல. இதனால் இலங்கை விமானப்படையினர் 8 பேருக்கும் வேறு இடத்தில் பயிற்சியளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குழுக்கள்தான் குரலெழுப்பி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ஒரு மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், அரசியல் தேவைக்காகவே இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் அதற்கு இந்திய அரசு ஆதரவு வழங்குவதில்லை.

இதற்கு சிறந்த உதாரணங்களாக புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு நீடித்துள்ளமை மற்றும் தனிஈழம் கோரும் மாநாடு தொடர்பில் இந்திய அரசு கருணாநிதியை கண்டித்துள்ளமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்..

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமான முறையில் செயற்பட்டு வருகின்றது. இந்த உறவுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளிலேயே சில குழுவினர் செயற்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

English summary
Sri Lanka today praised India for continuing with the proscription of the LTTE for another two years. "This is a very good action by India as a friendly government", Keheliya Rambukwella, the Minister of Information and Government spokesman told reporters here.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X