43 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி

பிரணாப் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை....
1935 -ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி, அரசியல், வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்தவர். ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969-ம் ஆண்டு தொடங்கியது. அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக முதலில்தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1975,1981,1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டா பிரணாப் முகர்ஜி. ஆனால் அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தியாவின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47-வயதில் பெற்றார் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-ம் ஆண்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது யூரோமனி என்ற ஏடு உலகின் சிறந்த நிதி அமைச்சர் பிரணாப் என்று அப்பொழுது புகழாரம் சூட்டியிருந்தது.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தம்மை பிரதமராக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டுப் பார்த்தார். இதில் ராஜீவ்காந்தி கடுப்படைந்தார். இதனால் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.
தனிக்கட்சி தொடங்கிய பிரணாப் முகர்ஜியால் 3 ஆண்டுகாலம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் காங்கிரசில் மீண்டும் ஐக்கியமானார். அப்பொழுது திட்டக் குழு துணைத் தலைவர் பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார் பிரணாப். அப்பொழுது சார்க் அமைப்பின் அமைச்சர்கள் குழுவுக்குத் தலைவராகவும் இருந்தார்.
2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
2009-ம் ஆண்டு நாட்டின் நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். ஆனால் இவர் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்த இந்த கால கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை எதிர்கொண்டிருந்தது.
43 ஆண்டுகால அரசியல்வாழ்வுக்குப் பிறகு நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார் பிரணாப் முகர்ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications