பிரணாப் முகர்ஜிக்கு தோல்வியடைந்த பி.ஏ.சங்மா வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சங்மா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு எனது வாழ்த்துகளையும், புதிய பணியில் அவர் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை. வேட்பாளர் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.
என்னை வேட்பாளராக நிறுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாஜக தலைவர்கள், முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும், அவர்கள் சார்ந்த அதிமுக, பிஜூ ஜனததாளம், பாஜக ஆகிய கட்சிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் பாரபட்சமே தலை தூக்கியிருந்தது. மிரட்டல்கள் உள்ளிட்டவை சரளமாக இருந்தன. எனவே மற்ற தேர்தல்களில் அமல்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் போல குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
பிரணாப் முகர்ஜியின் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடருவீர்களா என்று கேள்விக்கு அதற்கான வாய்ப்புகளை மறுக்கவில்லை என்றார் சங்மா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications