விலைக்கு வாங்கும் மின்சாரத்தை கூட தமிழகத்திற்கு ஒழுங்காக கொண்டு வர முடியவில்லை: தா. பாண்டியன்
நாகர்கோவில்: தமிழகத்தை பாதிக்கும் மின்சாரம், தண்ணீர் பிரச்சனைகளுக்காக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நதிநீர் பங்கீடு மூலம் தான் பாசனத் தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். காவிரி படுக்கையில் குறுவை சாகுபடி 5 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. அடுத்து சம்பா சாகுபடிக்கும் நெருக்கடி ஏற்படலாம். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் உணவு உற்பத்தியை பாதிக்கும். இது தேசிய பிரச்சனை ஆகும். எனவே, மத்திய அரசு இந்த பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை, பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக அரசின் அறிவிபபு இந்திய ஒருமைபாட்டுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும். தென்னக நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ஆண்டுகளாக இருந்த மின்வெட்டு அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், குஜராத்தில் இருந்து விலைக்கு வாங்கப்படும் மின்சாரம் கூட சரியான ஒருங்கிணைப்பு வசதி இல்லாததால் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. நிலக்கரி இறக்குமதி செய்வதிலும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் அனல் மின் நிலைய உற்பத்தியும் பாதிக்கப்பட்டு்ள்ளது.
தண்ணீர், மின்சாரம் ஆகிய இரு பிரச்சனைகளுக்காகவும் தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இல்லையென்றால் தமிழத்தில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications