நாகர்கோவில்: வயலில் பாய்ந்த கோவை பயணிகள் ரயில்
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோவை பயணிகள் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு மாற்றும்போது தடம்புரண்டதில் என்ஜின் வயலில் பாய்ந்தது.
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இன்று காலை 7.20 மணிக்கு கோவை பயணிகள் ரயில் புறப்பட வேண்டியிருந்தது. அதனால் ரயிலை யார்டில் இருந்து 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது 2வது பிளாட்பார்மில் குமரி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்ததால் கோவை ரயிலை கரியமாணிக்கபுரம் வரை உள்ள எண்ட்லைன் பகுதி வழியாக 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி ரயிலை இயக்கியபோது திடீர் என்று அது எண்ட்லைன் பகுதியை இடித்தது. இதில் ரயிலின் என்ஜின் மற்றும் தளவாடப் பொருட்கள் வைக்கும் பேக்கேஜ் பெட்டியும் வயலில் பாயந்தது. இதையடுத்து அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் கழற்றிவிட்டு வேறு என்ஜின் மூலம் ரயில் 3வது பிளாட்பார்முக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை பயணிகள் ரயில் 1 மணிநேரம் தாமதமாக 8.30க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த என்ஜினையும், பேக்கேஜ் பெட்டியையும் தூக்க திருவனந்தபுரத்தில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications