அசாம் இனமோதல்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அனைத்துக் கட்சிக் குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கோக்ராஜர்: அசாமில் இன மோதல் நீடித்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோக்ராஜரில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் அருண் கோகய் இன்று பார்வையிட்டார்.

கோக்ராஜர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இம்மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 கிராமங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து அகதிகளாகி நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்திய குழு ஆலோசனை

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு நேற்று கோக்ராஜர் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தது. உள்துறை அமைச்சகத்தின் வடகிழக்கு இணைச் செயலாளர் சாம்பு சிங், சிறப்பு செயலாளர் அஜய் சட்டா ஆகியோர் கோக்ராஜர் மாவட்ட நிர்வாகத்தினருடன் ராணுவ அதிகாரிகளுடன் கோக்ராஜர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்பு சிங், மத்திய படையின் 44 கம்பெனிகள் கூடுதலாக அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அனைத்துக் கட்சிக் குழு

மேலும் அசாம் முதல்வர் தருண் கோகய் இன்று முற்பகல் முதல் கோக்ராஜர் உள்ளிட்ட வன்முறை பாதித்த இடங்களைப் பார்வையிட்டு வருகிறார். இதேபோல் அசாமின் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த 17 பேர் கொண்ட குழுவும் வன்முறை பாதித்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தை ஆராய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+