பிரணாபுக்கு எதிராக சங்மா வழக்கு தொடர்வதற்கும், எங்களும் சம்பந்தமில்லை: நழுவிய பாஜக

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் அவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அளித்த கடிதத்தில் உள்ள கையெழு்தது போலியானது என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சங்மா தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
பிரணாப் முகர்ஜிக்கு எதிராக சங்மா உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் அது அவருடைய தனிப்பட்ட முயற்சி. அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனதை மனதார வரவேற்கிறோம் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சங்மாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக, ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications