கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வைகோவுக்கு உத்தரவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் ஈழ ஆதரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தான் காரணம் என்று பேசினார்.
இதையடுத்து கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வைகோ மீது சென்னை மாநகர முன்னாள் குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை 7வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சிறப்பு வழக்கறிஞர் எம்.கே.அசோகன் ஆகியோர் ஆஜராகி வழக்கில் சாட்சி விசாரணையை துவங்க உத்தரவி்டுமாறு கூறினர்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி அதே நாளில் வைகோ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications