தாமிரபரணியில் மீண்டும் அக்கிரமிப்புகள்: தண்ணீர் பஞ்சம் வருமா?
நெல்லை: கடந்த சில வாரங்களுக்கு முன் வருவாய்த் துறையினரால் தாமிரபரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல வீடுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் குறுக்குத்துறை அருகே தாமிரபரணி ஆற்றுக்குள் அனுமதியின்றி பெரிய கட்டிடங்கள் மற்றும் செங்கல் சூளைகள் உருவாகி வருகிறது. இதனால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காதோ என்ற அச்சத்தில் நெல்லை மாவட்ட மக்கள் உள்ளனர்.
பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் வரை பயணித்து நெல்லை, தூத்துககுடி, விருதுநகர் ஆகிய மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் புனித நதியான தாமிரபரணி சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. சுத்தமல்லி, சீவலபேரி, பாலமடை, ராஜவல்லிபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்படை வீடு ஆகிய பகுதிகளில் 15 அடி ஆழம் வரை ஆற்றுக்குள் உள்ள மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து தாமிரபரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 791 வீடுகளை அகற்றினர். ஆனால் அதன் பிறகு வண்ணார்பேட்டை, கருப்பன்துறை, ராஜவல்லிபுரம், திருமலைகொழுந்துபுரம், கீழநந்தம், சீவலபேரி, வல்லநாடு போன்ற பகுதிகளில் ஆற்றங்கரையை ஒட்டி நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் புதிதாக முளைத்துள்ளன. இதனால் குடிநீர் தேவை என்னவாகுமோ என்ற அச்சத்தில் நெல்லை மாவட்ட மக்கள் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications