டெல்லி உள்பட 8 வட மாநிலங்களில் கரண்ட் இல்லை- ரயில் சேவைகள் பாதிப்பு

நாட்டின் வடக்கு மின் தொகுப்பில் இன்று அதிகாலை 2.30க்கு மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தா ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் வரும் வரை மின்ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இன்று காலை 7 மணிக்குத்தான் மின்சாரம் மீண்டும் வந்தது.
தலைநகர் டெல்லியில் மின்சார ரயிலை நாள்தோறும் 18 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இன்று காலை மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்வதற்காக வந்த பலரும் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஒரு மணிநேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. மின்சார ரயில்கள் காலை 7 மணிக்கு பின்னரே புறப்பட்டுச் சென்றன. இருப்பினும் டெல்லி விமான நிலையத்தில் மின்விநியோக துண்டிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications