ரயில் விபத்து: ஜெயலலிதா இரங்கல்- நெல்லூர் விரைந்த மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். இந்த விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற நெல்லூருக்கு செல்லுமாறு மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நெல்லூர் விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளனார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications