நித்தியானந்தா போட்ட வழக்கு.. சைதை கோர்ட்டில் ஆர்த்தி ராவ் சரண்டராகி ஜாமீன் பெற்றார்!

அமெரிக்காவில் வசித்து வந்தவர் ஆர்த்தி ராவ். நன்கு படித்தவரான இவர் நித்தியானந்தாவின் பால் ஈர்க்கப்பட்டு அவரது சிஷ்யையாக சேர்ந்தார். ஆனால் சேர்ந்த சில காலத்திற்குள்ளாகவே ஆர்த்தி ராவிடம் நித்தியானந்தா பாலியல் ரீதியாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்தியானந்தாவிடமிருந்து விலகினார் ஆர்த்தி ராவ்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அவர் அங்கு தனியார் தொலைக்காட்சியில் நித்தியானந்தாவின் லீலைகள் என்று பல பாலியல் மோசடிச் சம்பவங்களை விளக்கிக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நித்தியானந்தா தன்னை எப்படியெல்லாம் சீரழித்தார், அசிங்கமாக நடந்து கொண்டார் என்பதை பேட்டிகள் மூலம் கூறினார்.
உண்மையில், இந்த ஆர்த்தி ராவ்தான், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தவர் ஆவார். அதை எப்படி தான் பதிவு செய்தேன் என்பதையும் விளக்கமாக கூறியிருந்தார் ஆர்த்தி ராவ். மேலும், இந்த வீடியோவை தான்தான் லெனின் கருப்பனிடம் கொடுத்து வெளியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லெனின் கருப்பனும், ஆர்த்தி ராவும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ஆர்த்தி ராவ் மீது சிபிசிஐடி போலீஸில் புகார் செய்தார் நித்தியானந்தா. இதையடுத்து லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டார். ஆர்த்தி ராவ் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்து அதையும் பெற்றார்.
இதையடுத்து சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications