எஸ்.ஐ.கொலைக்கு இன்ஸ்பெக்டரின் கவனக்குறைவு காரணமா?
நெல்லை: சுரண்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை ஏட்டு கொலை செய்த சம்பவத்தின் எதிரொலியாக கொலையானவர் பணிபுரிந்த அதே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டதோடு சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் தங்கியிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி முத்துவை சுரண்டையில் இருந்து சுத்தமல்லிக்கு மாற்றப்பட்ட ஏட்டு சண்முகராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். வேறு காவல் நிலையத்திற்கு தான் மாற்றப்பட்டதற்கு இசக்கி முத்து தான் காரணம் என்று நினைத்து சண்முகராஜ் அவரைக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சுரண்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் உள்ளிட்ட போலீசாரிடம் விசாரணை நடந்தது. அப்போது சமீபத்தில் சுரண்டை டாஸ்மாக் கடையில் நடந்த சோதனையின்போது பத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஐந்து பாட்டில்களை சண்முகராஜ் அமுக்கிவிட்டார். இது குறித்து கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் இதை கண்டு கொள்ளவில்லை.
இது தவிர காவல் நிலையத்தில் நடந்த சில சம்பவங்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் தேவ் மணிமுததாறுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. வரதராஜு உத்திரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications