அசாம் இனமோதலுக்கு காரணமே "அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேற்றம்தான்": எல்.கே. அத்வானி

அசாமில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே ஒருவாரம் நிகழ்ந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அத்வானி நிவாரண முகாம்களில் உள்ளோரை நேரில் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இதன் பினன்ர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அசாமில் நிகழ்ந்துள்ள மோதலானது இந்துக்களும் முஸ்லிம்களுக்கும் இடையேயான மோதலோ அல்லது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கு இடையேயான மோதலோ அல்ல.மிகப் பெரிய அளவில் வங்கதேசத்தில் இருந்து எல்லைதாண்டி வந்து குடியேறுவதால்தான் பிரச்சனை வெடித்திருகிறது.
இங்கே நான் கேட்ட விவரங்கள் அனைத்தும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. 2012-ம் ஆண்டிலும் கூட இத்தகைய நிகழ்வுகள் நடப்பது வேதனையளிக்கக் கூடியது. உரிய நேரத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணாவிட்டால் நிலைமை மிகவும் மோசமடைந்துவிடும். ஜம்மு காஷ்மீரிலும் கூட ஒரு பிரிவு மக்களது கோரிக்கைகளை நாம் காதில்தான் வாங்கிக் கொள்கிறோம். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை அந்த சூழல் அசாமுக்கு வந்துவிடக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications