'சைன் போர்டு'களை சாய்க்கும் விபச்சாரிகள்... புலம்பும் நியூசிலாந்து மக்கள்

நியூசிலாந்தின் தெற்கு ஆக்லாந்தில் உள்ள சைன் போர்டுகள் பலவும் சாய்ந்தும், உடைந்தும், வளைந்தும் காணப்படுகின்றன. ஏதாவது ஊர்வலத்தின்போது விஷமிகள் அடித்து நொறுக்கு விட்டார்கள் போல என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் விபச்சாரப் பெண்களாம்.
இரவு நேரத்தில் சாலைகளுக்கு அலங்காரத்துடன் வரும் விபச்சாரப் பெண்கள், இந்த சைன் போர்டுகள் மீது சாய்ந்தபடியும், அமர்ந்தபடியும் இருப்பதால்தான் இவை சேதமடைந்து விடுகின்றனவாம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 40க்கும் மேற்பட்ட சைன் போர்டுகளை இப்படி சாய்ந்தே உடைத்து விட்டார்களாம் விபச்சாரப் பெண்கள். தெற்கு ஆக்லாந்தில் விபச்சாரம் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக மக்கள் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து டோனா லீ என்ற நகராட்சி கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், விபச்சாரப் பெண்கள் பலர் இந்த சைன் போர்டுகளைத் தாங்கி நிற்கும் இரும்புக் கம்பிகளைப் பிடித்து ஊஞ்சலாடுவது போலவும், போல் டான்ஸ் ஆடுவது போலவும் செய்து வாடிக்கையாளர்களைக் கவருகிறார்கள். பல பெண்கள் சைன் போர்டிலேயே சாய்ந்தபடி நிற்கின்றனர். பலர் வாடிக்கையாளர்களை பக்கத்தில் நிற்க வைத்து இதில் சாய்ந்தபடி பேரம் பேசுகின்றனர்.
பல விபச்சாரப் பெண்கள் ரொம்ப குண்டாக இருப்பதால் அவர்களின் எடையைத் தாங்க முடியாமல் இவை வளைந்தும், நெளிந்தும், சில சமயங்களில் உடைந்ததும் போய் விடுகின்றன என்றார் கவலையோடு.












Click it and Unblock the Notifications