நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம்... அத்வானியின் கலகம்....?

எல்.கே.அத்வானி இணையதள வலைப்பூவில் (ப்ளாக்), 2014-ம் ஆண்டு தேர்தலைப் பற்றி கூறியிருக்கும் ஆரூடங்கள்தான் இப்போது நாடு முழுவதும் அரசியலில் ஹைலைட்டாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறியிருப்பதால் காங்கிரஸ் கடும் எரிச்சல் அடைந்திருக்கிறது.
அதே போல பாஜக ஆட்சிக்கு வராது என்பது போல அத்வானி கருத்துத் தெரிவித்திருப்பதை,
ஓட்டப் பந்தயம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார் அத்வானி என்று சாடியிருக்கிறது காங்கிரஸ்.
ஆனால் அத்வானியின் கருத்து காங்கிரசை விட பாரதிய ஜனதாவுக்குள் தான் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
அதாவது பாஜக அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் 3வது அணியைச் சேர்ந்த ஒருவர் தான் (பிகார் முதல்வர் நிதிஷ்குமார்?) பிரதமராக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் அத்வானி.
இதனால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வருணிக்கப்படும் நரேந்திர மோடி முகாமின் முகம் இப்போது சிவந்து கிடக்கிறது. பாஜக அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் 3-வது அணியின் சார்பில்தான் ஒருவர் பிரதமராவார் என்று அத்வானி கூறியிருப்பது மோடியை மனதில் வைத்துத்தான் என்று அந்த முகாம் குமுறுகிறது.
இதன்மூலம் பாஜகவைச் சேர்ந்த யாரும், குறிப்பாக மோடி, பிரதமராக முடியாது என்று தான் அத்வானி கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரசை விமர்சிக்கலாம்.. 3-வது அணியை விமர்சிக்கலாம்.. இந்த அணிதான் பிரதமர் என்று ஜோசியம் கூறினால் மக்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்? காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் போது நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்தி தேர்தல் களத்துக்குப் போவதற்கு முன்பே இவங்களுக்கு வாக்குப் போட்டு பிரயோஜனம் இல்லை என்கிற மாதிரி மூத்த தலைவரான அத்வானியே கூறியிருப்பது என்பது இம்மெச்சூர்ட்டியான ஒரு செயல்தான் என்கிறது மோடியின் முகாம்.
அத்வானி கருத்து பற்றி பா.ஜ.க. மூத் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், அத்வானியைப் பொருத்த வரை அரசியலில் அவரது இன்னிங்ஸ் முடிந்து விட்டது. எனவே 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு ஏற்பட்டாலும் அது அவரை பாதிக்கப் போவதில்லை. இதனால்தான் அவர் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். இது கட்சி மீதான மதிப்பை குறைப்பதாக உள்ளது. அத்வானி இப்படி தன் கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றார்.
நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம்... அத்வானியின் ஆரூடம்....?
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications