ஈரல், சிறுநீரகக் கோளாறு: மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை மருத்துவமனையில் அனுமதி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு(67) ஈரல் கோளாறு இருந்தது கடந்த ஆண்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த்து அவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக செயல் இழந்துவிட்டன என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டது. அப்படி இருந்தும் நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் தனி விமானம் மூலம் மாலையே சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு தனது ஈரலில் ஒரு பகுதியைத் தர அவரது மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர்களின் திசுக்கள் ஒத்துப்போக வேண்டும். முதலில் அறுவை சிகிச்சையை தாங்கும் அளவுக்கு விலாஸ்ராவ் தேற வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
மும்பையில் வைத்து ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தேஷ்முக் குடும்பத்தார் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்வது தான் சிறந்தது என்று தோன்றியுள்ளது என்று மும்பை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications