'கல்வி உதவித்தொகை மோசடி: அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்?'
சென்னை: ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடி விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட நாமக்கல் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் முறைகேட்டுக்கு மூலக் காரணமாக இருந்த ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றும் மாவட்ட நல அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர் ஆகியோரை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன்?
மாணவர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் பலவற்றில் தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து இல்லை. சுகாதார ஆய்வாளர்களின் சான்றுகள் இல்லை. இருப்பினும் அவசர அவசரமாக ஆதிதிராவிட நலத்துறையின் எழுத்தர், கண்காணிப்பாளரின் சாதகமான குறிப்புகளுடன் உரிய அதிகாரி ஒப்புதல் கையெழுத்திட்டுள்ளார்.
பின்பு அவசரமாக அந்த காசோலைகள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, புரோக்கர்கள் மூலம் வங்கிகளில் மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தது அதிகாரிகள் தான்.
தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அலுவலக பணியாளர்களையும் கைது செய்ய ஏன் உத்தரவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications