ஐடிஐ மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியரின் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் துவங்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதால், தொலைவில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, இல்லங்களில் இருந்து வந்து செல்வதற்கு வசதியாக பள்ளி மாணவ, மாணவிகளைப் போல இவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ரூ.6 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து வரும் 21,925 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
அரசின் இந்த நடவடிக்கை தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிக அளவு மாணவ மாணவியர்கள் சேர்ந்து படிக்கவும், வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் உருவாவதற்கும் அடித்தளமாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications