For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 கி.மீ. நீளமுள்ள பைபிள்: சென்னை கண்காட்சியில் ஆர்வத்துடன் ரசித்த மக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bible
சென்னை: 200 கிலோ எடையும் 2 கி.மீ. நீளமும் உடைய உலகிலேயே மிகப்பெரிய பைபிள் சென்னை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் ஹாலில் ஆண்டு தோறும் பைபிள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி 12ம் தேதி வரை நடக்கிறது.

இக்கண்காட்சியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரமாண்டமான பைபிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைபிளை உருளை போன்றவடிவில் உருவாக்கி உள்ளனர். இதில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவை உள்ளன. படங்கள் அனைத்தும் வண்ணமயமாக தத்ரூபமாக அச்சிடப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பெரிய பைபிள் என்ற பெருமையுடைய இப்பைபிளின் எடை 200 கிலோ. இப்பைபிளை பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்கள்.

இதுபற்றி கண்காட்சியை நடத்தும் புத்தக நிறுவன நிர்வாகி ஜோஸ் தாமஸ் கூறும்போது, தற்போது நடந்து வரும் கண்காட்சியில் பல்வேறு விதமான பைபிள்கள் இடம் பெற்றுள்ளன. சிறிய பைபிளை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் சிறிய ரக பைபிள்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.

இந்த கண்காட்சியில் கிறிஸ்தவ கதைகள் அடங்கிய ஏராளமான புத்தகங்களும் உள்ளன. கிறிஸ்தவ பாடல்கள் கொண்ட சி.டி., டி.வி.டி.க்கள், ஹாலிவுட் கிறிஸ்தவ திரைப்பட டி.வி.டி.க்களும் உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கண் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கண்காட்சியில் உலகின் மிகச் சிறிய பைபிள் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 10 கிராம் எடையில் நூதன முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 1189 அதிகாரங்கள் உள்ளன. புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு போன்றவை அதில் இடம் பெற்றுள்ளன.

English summary
On display at the Chennai International Christian Book and Music Fair is the world's longest Bible weighing 200 kilograms, stretching out for two kilo metres!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X