ஜெனீவாவுக்குச் செல்லுங்கள் தலைவரே... கருணாநிதிக்கு சுப.வீரபாண்டியன் கோரிக்கை

சென்னையில் நேற்று நடந்த டெசோ மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற தலைவர்கள் ஈழம் குறித்துப் பேசினர்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,
தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
2-வது சவால் தமிழர்கள் மீது ராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த 3 சவால்களை வென்றெடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தனி ஈழம்தான் தீர்வு என்பதை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அதற்கான யுக்திகளையும், செயல் திட்டங்களையும் கலைஞர் வகுத்துத்தர வேண்டும். களம் காண நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈழம் வெல்லும், காலம் சொல்லும் என்றார்.
கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில்,
ராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி கருணாநிதி தொடக்கியுள்ள டெசோ' மாநாட்டை வெற்றிகரமாக தொடக்கியுள்ளோம்.
இங்கே பேசியவர்கள் காவல்துறை யாரும் இங்கே இல்லை என்று வருத்தப்பட்டனர். தமிழக மக்களின் காவல் தலைவராக கருணாநிதியும், காவலராக நாமும் இருக்கும்போது இங்கு காவலர்கள் தேவையில்லை.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ஈழப் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பவேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் தனி ஈழம் பிறக்கும் என்றார்.
சுப.வீரபாண்டியன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில்,
2009-ல் இலங்கையில் நடந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது நாம் 3-ம் கட்ட போராட்டத்தில் களத்தையும், யுக்தியையும் மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதன் தொடக்கம்தான் இந்த மாநாடு. இலங்கையில் நடப்பது தமிழ் ஈழப் பிரச்சினை இல்லை. அது மனித உரிமை சிக்கலாகும். இதனை உலக கவனத்துக்கு கொண்டு சென்றால்தான், நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும்.
தமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications