பெங்களூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூடு, 2 பேர் காயம்

பெங்களூர்-மைசூர் சாலையில் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்துள்ள பிடுதி அருகே மரியப்பன்பாளையாவில் இந்த சம்பவம் நடந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு இங்குள்ள முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்த மூன்று பேர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்தக் கிளையின் மேலாளர் சுதாகரும் பாதுகாவலரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு கூட்டம் கூடிவிடவே அந்த மூவரும் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுட்டவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தார்களா அல்லது மேலாளரின் மீது இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் பெங்களூர் பல்கலைக்கழகத்துக்கு மிக அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications