டபுள் மீனிங்கில் பேசும் ஹெட்மாஸ்டர்... கலெக்டரிடம் ஆசிரியை புகார்!
நாமக்கல்: தான் பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், டபுள் மீனிங்கில் பேசுவதாகவும், பாடம் நடத்த விடாமல் சேட்டை செய்து வருவதாகவும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆசிரியை ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமரகுருபரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் அங்கு வேகமாக வந்தார். கலெக்டரிடம் ஆங்கிலத்தில் அவர் பேசினார். அவர் ஆவேசமாக பேசியதால் அனைவரும் அவரையே கவனித்தனர், கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் கூறுகையில், என் பெயர் சீத்தாலட்சுமி. நான் திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.
நான் ஏற்கனவே, மோகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் போது, அந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் மாணிக்கம் என்பவர், என்னிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவதும், தனியாக தன்னுடைய அறைக்கு தேவையில்லாமல் கூப்பிட்டும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து என்னை மாணவர்களுக்கு பாடம் நடத்தவிடாமல் தொல்லை செய்தார்.
அவரது விருப்பத்துக்கு உடன்படாத என்மீது பொய் புகார்களை அதிகாரிகளிடத்தில் கொடுத்து திருமலைப்பட்டிக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ய வைத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையடுத்து இதுகுறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார் கலெக்டர் குமரகுருபரன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications