விலாஸ்ராவ் உடலுக்கு மன்மோகன்சிங்,சோனியா அஞ்சலி செலுத்தினர்
புனே: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடல் அவரது சொந்த ஊரான மகராஷ்டிர மாநிலம் பாபால்கானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விலாஸ்ராவ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மனைவி வைஷாலியை கட்டிப்பிடித்து சோனியா ஆறுதல் கூறினார். விலாஸ்ராவின் மகன் அமித்துக்கு மன்மோகன்சிங் ஆறுதல் கூறினார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கரநாராயணன், முதல்வர் பிரித்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித் பவார், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் உள்ளிட பலரும் விலாஸ்ராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி மட்டும் ஏற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் இனிப்புகள் எதுவு வழங்கப்படவில்லை. வழக்கமாக நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications