குச்சனூர் கருப்பணசாமிக்கு 4,000 குவார்ட்டர் பாட்டில்கள் படையலிட்ட பக்தர்கள்
தேனி: குச்சனூர் சோனைக் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் சோனைக் கருப்பணசாமி கோவில் தனி சன்னதியாகவே உள்ளது. ஆடி மாதம் 4வது வாரம் முடிந்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக மது பாட்டில்களை வழங்கினர்.
பக்தர்கள் அளித்த 4,000 மதுபாட்டில்கள் சாமிக்கு படைக்கப்பட்டன. பூசாரி ஜெயபாலமுத்து தனது வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினார். பின்னர் சாமி இருந்த அறைக்கதவை பூட்டிக் கொண்டு சாமி சிலையின் பின்புறமுள்ள துவாரத்தில் மதுவை ஊற்றினார். அந்த துவாரத்தில் மதுவை ஊற்றினால் அதை கருப்பணசாமி ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.
இந்த திருவிழாவையொட்டி சாமிக்கு 13 ஆடுகள் மற்றும் 10 சேவல்கள் பலி கொடுக்கப்பட்டன. தொடர்ந்து 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா நள்ளிரவு 1 மணி வரை நடந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications