விபச்சாரத்திற்குக் கடத்தப்பட்ட குத்தாட்டப் பெண்கள் மீட்கப்பட்டது எப்படி?... திரில் தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விபச்சாரக் கும்பல் ஒன்றிடம் சிக்கி, விபச்சாரம் செய்வதர்காக கூண்டோடு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட பெண்கள், தாங்கள் எப்படி தப்பித்தோம் என்பதை பரபரப்பாக கூறியுள்ளனர்.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில், அண்ணா பல்கலைக்கழகம் அருகே, 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஏராளமான இளம் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களுக்கும், 2 ஆண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கமாக காரில் வந்தார். கூட்டத்தைப் பார்த்து காரை நிறுத்தி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தார்.

அந்த இரண்டு ஆண்களும் விபச்சார புரோக்கர்கள் என்று அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சிபிசிஐடி விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் படை விரைந்து வந்து அவர்களை ரவுண்டப் செய்தது.

பெண்களுடன் பேசிக் கொண்டிருந்த ஜாய் சாது மற்றும் தமீம் அன்சாரி ஆகிய இரு விபச்சார புரோக்கர்களையும் வளைத்துப் பிடித்தனர். மேலும் அங்கிருந்த 9 இளம் பெண்களையும் பிடித்தனர். அவர்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்று தெரிய வந்தது.

இவர்கள் தவிர மேலும் 23 இளம் பெண்களும் அங்கிருந்தனர். அவர்கள் அனைவருமே ஹோட்டல்களில் டிஸ்கோ, குத்தாட்டம் உள்ளிட்ட நடனம் ஆடி பிழைத்து வருபவர்கள். 3 பேர் வெளி மாநிலத்தவர். 20 பேர் உள்ளூரிலேயே வசித்து வருபவர்கள்.

அத்தனை பேரையும் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ஒரு பெண் கூறிய தகவல்...

நான் வட பழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சனி-ஞாயிறுகளில் இரவு நடனம் ஆடி பிழைப்பு நடத்தி வருகிறேன். அதில் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரைதான் கிடைக்கும். எனக்கு தெரிந்த புரோக்கர் ஒருவர் என்னை அணுகி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் நடன விருந்து நடக்க உள்ளது. அதில் வெளிநாட்டு பிரமுகர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள்.

அங்கு நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கப்படும். நடனத்தை ரசிக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளி வீசுவார்கள். உனக்கு ஏராளமான பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். நானும் அதை உண்மை என்று நம்பி, அந்த நடன நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தேன். என்னைப்போல மேலும் 22 நடன பெண்களை அழைத்தனர். எங்கள் அனைவரையும் சொகுசு பஸ்சில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பஸ்சில் செல்லும் போது, எங்களை அழைத்துச் சென்ற புரோக்கர்களின் நடவடிக்கை சரி இல்லை. நடன விருந்து என்று அழைத்துச் சென்றவர்கள் திடீரென்று, உல்லாச விருந்தும் படைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டனர். மேலும் வெளிநாட்டு பிரபலங்களை இன்ப விருந்தில் திளைக்க வைத்தால், அவர்கள் எங்களை அவர்களது நாட்டுக்கும் அழைத்துச் செல்வார்கள் என்ற திடுக்கிடும் தகவலையும் புரோக்கர்கள் சொன்னார்கள்.

இதை கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தோம். இதனால் பஸ்சை நிறுத்தச் சொன்னோம். அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்ற போது, நாங்கள் சண்டை போட்டு பஸ்சை நிறுத்தினோம். பஸ்சை விட்டு இறங்கியவுடன் புரோக்கர்கள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்களை போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோதுதான், போலீசார் வந்து எங்களை காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால், எங்களை ஏதாவது செய்திருப்பார்கள் என்றார்.

தற்போது மீட்கப்பட்ட நடனப் பெண்கள் அனைவரும் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆண் புரோக்கர்கள் மற்றும் 9 விபச்சாரப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+