புனேவில் வணிக வளாகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: சிறுமி காயம்

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவில் உள்ள லக்ஷ்மி தாரா காம்பிளக்ஸ் வெளியே இன்று பிற்பகல் 3.30 மணிக்கு குறைந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தாங்கே சௌக் பகுதியில் உள்ளது லக்ஷ்மி தாரா வணிக வளாகம். அந்த வளாகத்திற்கு வெளியே ரசாயனங்கள் அடங்கிய பை ஒன்று கிடந்துள்ளது. அதை ஒரு சிறுமி எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அது வெடித்ததில் சிறுமி காயமடைந்தார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 1ம் தேதி புனேவில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டு வெடித்தபோதும் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+